May 4, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து பயணிகளைக் கத்தியால் குத்தப் போவதாக மிரட்டிய நபருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

பேருந்து பயணிகளைக் கத்தியால் குத்தப் போவதாக மிரட்டிய நபருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை

Share:

பத்து பஹாட், பிப்ரவரி.20-

ஜோகூரில் உள்ள பொதுப் பேருந்து ஒன்றில் இரண்டு பயணிகளைக் கத்தியால் குத்தப் போவதாக மிரட்டிய வேலையில்லாத இளைஞர் ஒருவருக்கு, பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506-ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 27 வயதான Hafiz Hilmi Zolkifli என்ற நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் Nurasidah A Rahman இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி, பத்து பஹாட்டில் இருந்து ரெங்கிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் 20 மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண்களை அணுகிய Hafiz, "நான் உங்களைக் கத்தியால் குத்தி விடுவேன்" என்று கூறி மிரட்டியுள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இருவரும் இது குறித்து போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அன்றைய தினமே சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Related News