Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கொள்ளையிட்டதாக இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொள்ளையிட்டதாக இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், டிச. 12-


கடந்த வாரம் ஒரு கும்பலாக கூட்டுச்சேர்ந்து ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு ஆடவர்கள் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

33 வயது கே. ஸ்ரீதரன் நாயுடு மற்றும் 33 வயது ஜே. முகிலன் நாயுடு ஆகிய இருவரும், நீதிபதி நோர் அஸா கஸ்ரான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்விருவரும் 57 வயது தொழில் அதிபர் சையிட் ஜமாலுடின் சையிட் ஹமிட் என்பவரை பாராங் முனையில் மடக்கி, அவருக்கு சொந்தமான ஹோண்டா ஏக்கோர்ட் கார் மற்றும் 54 ஆயிரம் ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையிட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் பட்டர்வொர்த் அருகில் தாமான் புக்கிட் கெச்சில் l என்ற இடத்தில் இவ்விருவரும் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டதாக கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 397 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →