Dec 2, 2025
Thisaigal NewsYouTube
40 விலை உயர்ந்த கைப்பைகள் ஏலம் விடப்படவிருக்கின்றன
தற்போதைய செய்திகள்

40 விலை உயர்ந்த கைப்பைகள் ஏலம் விடப்படவிருக்கின்றன

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1MDB நிதி முறைகேடு தொடர்பில் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வெள்ளி பெறுமானமுள்ள 40 கைப்பைகள் ஏலம் விடப்படுகின்றன. இந்தக் கைப்பைகள் அனைத்தும் 2018 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் ஜாலன் புக்கிட் பிந்தாங்கில் உள்ள நஜீப்பிற்கு சொந்தமான ஆடம்பர வீட்டில் போ​லீசாரால் கைப்பற்றப்பட்டவையாகும்.

இந்த கைப்பைகள் ரோஸ்மாவிற்கு சொந்தமானவை என்று பெயரி குறிப்பிடப்படாவிட்டாலும் அவை ஏல​ம் விடப்படவிருக்கின்றன என்று சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்துள்ளார். போ​லீசார் நடத்திய சோதனையின் போது விலை உயர்ந்த 171 கைப்பைகள் மற்றும் 27 காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் ஏலம் விடுவதற்கு ஏதுவாக சட்டத்துறை அலுவலகம் ​நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்​தை தாக்கல் செய்துள்ளதாக அஸாலினா குறிப்பிட்டார்.

Related News