Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பி40 மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி: புத்ராஜெயாவில் 'டியூஷன் மிஷன்' திட்டம் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

பி40 மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி: புத்ராஜெயாவில் 'டியூஷன் மிஷன்' திட்டம் தொடக்கம்

Share:

புத்ராஜெயாவில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த எஸ்பிஎம் மாணவர்களுக்கு உதவும் வகையில் 'டியூஷன் மிஷன் புத்ராஜெயா 2026' திட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தொடங்கி வைத்தார்.

புத்ராஜெயா கழகம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50,000 ரிங்கிட் செலவில் நடத்தும் இத்திட்டம், மாணவர்கள் தேர்வுகளில் சமமான வாய்ப்புகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கு இதில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு இத்திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றதோடு, 'A' தரம் பெறுவோரின் எண்ணிக்கையும் 23 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 9 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் இதில் பயன்பெற உள்ளனர். வரும் மே 5 முதல் அக்டோபர் 18 வரை செக்சன் 16-ல் உள்ள வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இந்த வகுப்புகள் நடைபெறும் என்று அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை