Sep 27, 2026
Thisaigal NewsYouTube
மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ராணுவ அதிகாரி 5 நாள் போலீஸ் காவலில்
தற்போதைய செய்திகள்

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ராணுவ அதிகாரி 5 நாள் போலீஸ் காவலில்

Share:

சைபர் ஜெயா மெக்ஸ் அதிவேக நெடுஞ்சாலையில், மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 31 வயது ராணுவ அதிகாரிக்கு இன்று 5 நாள் போலீஸ் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை, தனது காரை எதிர் திசையில் ஓட்டிச் சென்ற அந்த அதிகாரி, முன்னால் வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து தனது மனைவியுடன் வந்து கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க வங்காளதேச சுற்றுப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி படுகாயத்திற்கு ஆளாகினார்.

கைதான அந்த இராணுவ அதிகாரி மீது தற்போது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related News