இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்.10-
ஜொகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள லின்கேடுவா நெடுஞ்சாலையில், சூப்பர்மேன் போல் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் உளவுத் தகவல்களாலும், பொதுமக்களின் உதவியுடனும், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அந்த நான்கு இளைஞர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் எம்.குமரேசன் தெரிவித்தார்.
இவர்களின் செயல் தங்களுக்கும் பிற சாலைப் பயணிகளுக்கும் ஆபத்தானது என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.








