குவா மூசாங், செப்டம்பர்.08-
கிளந்தான், குவா மூசாங், சுங்கை செடிங்கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் சட்டவிரோதமாகத் தங்கம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கும்பல் ஒன்றைப் போலீசார் முறியடித்துள்ளனர்.
மூன்று அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூட்டரசு சேமப்படை தெரிவித்துள்ளது. எவ்வித செல்லத்தக்க ஆவணங்களின்றி அவர்கள் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக அது தெரிவித்துள்ளது.
தங்கம் தோண்டும் நடவடிக்கைக்கு அவர்கள் பயன்படுத்திய சுமார் ஐந்து லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள Hydraulic Excavator மண்வாரி இயந்திரத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








