May 22, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள்கள் ஊர்வலம் துயரத்தில் முடிந்தது
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் ஊர்வலம் துயரத்தில் முடிந்தது

Share:

ஈப்போ, மார்ச் 2 -

மோட்டர் சைக்கிள் குழுவினர் ஊர்வலமாக சென்ற போது அவர்களின் இரு சக்கர வாகனங்கள் ஒன்று மற்றொன்றுடன் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காஜாங் சிரம்பான் லெக்காஸ் நெடுஞ்சாலையின் 27.6 ஆவது கிலோ மீட்டரில் நீலாய் அருகில் நிகழ்ந்தது.

இந்த மோட்டார் சைக்கிள்கள் ஊர்வலத்தின் போது முன்புறம் சென்ற மோட்டார் சைக்கிள், சாலையிலிருந்து சறுக்கி கீழே விழுந்ததில் பின் தொடர்ந்து வந்த ஐந்து மோட்டர் சைக்கிகள், வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் கீழே கிடந்த மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியதாக நிலாய் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் மாட் கானி லாதெ தெரிவித்தார்.

இதில் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான பெண் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News