கோலாலம்பூர், அக்டோபர்.04-
குளோபல் சமுஃப் ஃபிளொதில்லா மனிதநேயக் குழுவில் இடம் பெற்ற 23 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது, அவர்கள் தாயாகம் திரும்பும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவது, மடானி அரசாங்கத்தின் ராஜ தந்திர உறவின் மகிமையை நிரூபிக்கிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
அந்த 23 மலேசியர்களும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் அளவிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு வீச்சாகப் போராடியதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.
மனித நேயம், நீதி, மக்களின் சுயமரியாதை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மடானி அரசாங்கத்தின் அரச தந்திர வலிமையை இந்த வெற்றி காட்டுவதாக அவர் தெரிவித்தார்.








