கோத்தா கினபாலு, செப்டம்பர்.21-
சபா, இலாபுவான் ஆகிய மாநிலங்களின் தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்குக் கல்வி, திறன் பயிற்சி போன்றவைகளை அளிக்கும் மகத்தான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தலைமையில், 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த மாபெரும் முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். புறநகர் வட்டார மேம்பாட்டு அமைச்சு, மாரா, கல்வி அறவாரியம், மாரா ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இவர்கள் சாதாரணப் பயிற்சியாளர்கள் அல்ல, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முகவர்களாகச் செயல்பட உள்ளனர். கல்வியோடு, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் படை, சபா சமூகத்தின் கல்வி, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக துணைப்பிரதமர் குறிப்பிட்டார்.








