Dec 30, 2025
Thisaigal NewsYouTube
செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது
தற்போதைய செய்திகள்

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.30-

பினாங்கில் செல்லப் பிராணிகளை அழைத்து வரக் கூடிய வசதிகள் கொண்ட GPM வணிக வளாகமானது, அதன் அனைத்து நுழைவு வாயில்களிலும், செல்லப் பிராணிகள் குறித்த, பெரிய அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டுமென பினாங்கு தீவு மாநகர் மன்றமான MBPP வலியுறுத்தியுள்ளது.

அதே வேளையில், சம்பந்தப்பட்ட வணிக வளாகமானது, 15 கிலோவுக்கும் குறைவான செல்லப் பிராணிகளையே உடன் அழைத்து வர வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், செல்லப் பிராணிகளை அழைத்து வரும் வாடிக்கையாளர்கள், எப்போதும் அதனை, தள்ளு வண்டியிலோ அல்லது கையிலோ வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வாடிக்கையாளர்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே செல்லப் பிராணிகளை அழைத்து வர அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் பினாங்கு மாநகர் மன்றம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் இஸ்லாமிய வாடிக்கையாளர் ஒருவர், சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தின் மின்தூக்கியில், செல்லப் பிராணி ஒன்றுடன் தான் பயணித்த கசப்பான அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து, இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related News