Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தம் மீது லஞ்ச ஊழல் விசாரணையா?  பிரதமரை சாடினார் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்
தற்போதைய செய்திகள்

தம் மீது லஞ்ச ஊழல் விசாரணையா? பிரதமரை சாடினார் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்

Share:

தம் மீதும், தமது குடும்பத்தின் மீதும் தொடங்கப்பட்டுள்ள லஞ்ச ஊழல் மீதான விசாரணை தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்- மையும் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன் சாடியுள்ளார்.

இது தங்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள ஒரு வேட்டையாகும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய சகாவான டைம் ஜைனுதீன் குறிப்பிட்டார்.

சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக டைம் ஜைனுதீன் - க்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரவதாகவும், அவரின் குடும்பத்திற்கு சொந்தமான கோலாலம்பூரில் உள்ள 270 கோடி வெள்ளி மதிப்புள்ள 60 மாடி கோபுரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்மெஸ்.பி.ஆர்.எம் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அண்மையில் அறிவித்து இருந்தார்.

எனினும் தனக்கு எதிராக எம்மாதிரியான குற்றச்சாட்டுகளை எஸ்.பி.ஆர்.எம் கொண்டுள்ளது என்பது குறித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் அனுப்பியும், இதுவரையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மையை அந்த ஆணையம் விளக்கவில்லை என்று வயதான டைம் ஜைனுதீன் குற்றஞ்சாட்டினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை