கோலாலம்பூர், அக்டோபர்.25-
கோலாலம்பூர், தாமான் டேசா- எம்ஆர்டி ரயில் வளாகத்தில் வேலி வெட்டப்பட்டு, அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று மதியம் 12.41 மணியளவில் புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் வழித்தடத்திற்கான உதவி போலீஸ்காரர்களிடமிருந்து தாங்கள் புகார் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எம்ஆர்டி ரயில் சேவைக்கான சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்புக்கான கேபள் கம்பிகள் வெட்டப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் காரணமாக எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தடத்திற்கான ரயில் சேவையில் இன்று தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








