பாங்கி, ஜூலை.27-
6.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 34 ஆயிரத்து 371 நிலுவையிலுள்ள அபராதங்களை 28 சரக்கு வாகன நிறுவனங்களும் விரைவுப் பேருந்து நிறுவனங்களும் 14 நாட்களுக்குள் செலுத்தி விட்டதாக சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி அறிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்த உடனேயே, அனைத்து நிறுவனங்களும் அபராதங்களைச் செலுத்த ஜேபிஜேவை அணுகியதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், நிலுவையில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு மேலும் ஒரு மாதம் காலம் வழங்கப்பட்டுள்ளது, தவறினால் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என ஜேபிஜே எச்சரித்துள்ளது.








