செர்டாங், செப்டம்பர்.30-
கோலாலம்பூரில் கார் ஒன்றைச் சுற்றி வளைத்துப் பகடி செய்த சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 முதல் 21 வயதுடைய அவர்கள் பூச்சோங் மற்றும் ஷா ஆலம் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக செர்டாங் ஒசிபிடி துணை ஆணையர் முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த காரைச் சுற்றி வளைத்த 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் இக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் அக்காரை காலால் எட்டி உதைப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அவர்களுக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








