ஷா ஆலாம், ஆகஸ்ட்.26-
பலத்த காற்று, கனத்த மழையினால் சிலாங்கூர் மாநிலத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் ஒரு சிறார் உட்பட இருவர் காயமுற்றனர்.
முதல் சம்பவம், கிள்ளான், ஜாலான் பைப் பகுதியில் நிகழ்ந்தது. இதில் ஒன்பது வயது சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூன்று தையல்கள் இடப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
இரண்டாவது சம்பவம் ஜாலான் காப்பார் – கோல சிலாங்கூர் சாலையில் நிகழ்ந்தது. இதில் 35 வயது லோரி ஓட்டுநர் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.
லோரி மீது மரம் சாய்ந்ததில் அந்த லோரி ஓட்டுநர் காயமுற்றார். கோல சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படையின் உதவியுடன் அந்த லோரி ஓட்டுநர் மீட்கப்பட்டதாக அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.








