Oct 16, 2026
Thisaigal NewsYouTube

267 களவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
267 களவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன

கோலாலம்பூர், டிச.16-

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 267 களவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆசிய நாடுகளுக்கிடையிலான பயணத்தின்போதும் மலேசியாவுக்குள் நடக்கும் விமானப் பயணங்களின் போதும் இக்களவுகள் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் 30 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Hussein Omar குறிப்பிட்டார்

இந்த களவு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பொதுவாக தாங்கள் இலக்காகக் கொண்ட விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் ஒருவராகவே இருப்பார்கள். அவர்கள் பயணிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ அல்லது விளக்குகள் மங்கலாக இருக்கும் வெளிச்சம் குறைந்திருக்கும் போதோ இந்தக் களவுகளைச் செய்வார்கள். கடன் அட்டைகள், நகைகள், பணம், பணப்பைகள் போன்றவை பொதுவாக திருடப்படும் பொருட்களாகும் என அவர் தகவல் வெளியிட்டார்.

பல புகார்கள் இருந்தபோதிலும், பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் பொருள் எப்போது களவாடப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இன்னும் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார் அவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →