கினாபாத்தாங்கான், ஜனவரி.25-
சபா இடைத் தேர்தல்களில் இரண்டு தொகுதிகளையும் அம்னோ தற்காத்துக் கொண்டது.
கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியையும், சட்டமன்றத் தொகுதியையும் பாரிசான் நேஷனல் தற்காத்துக் கொண்டதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.
கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர். முஹமட் குர்னியாவான் நாயிம் மொக்தார் 12,426 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.
லாமாக் சட்டமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் அயோப், 3, 689 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், லாமாக் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சபா அம்னோவின் முன்னாள் தலைவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இவ்விரு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற்றது.








