Mar 25, 2026
Thisaigal NewsYouTube
குழந்தை பராமரிப்பாளர் ஒருவரின் தடுப்புக்காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

குழந்தை பராமரிப்பாளர் ஒருவரின் தடுப்புக்காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

Share:

ஜோகூர்,ஜூலை 28-

இரண்டு மாதப் பெண் குழந்தையைச் சித்ரவதைப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளர் ஒருவரின் தடுப்புக்காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று நாள் தடுப்புக்காவல் நாளை தொடங்கி புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தெற்கு JOHOR BAHRU மாவட்ட போலிஸ் தலைவர் Asisten Komisioner Raub Selamat கூறியுள்ளார்.

பராமரிப்பு இல்லத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தை பால் குடிக்காமல் எப்பொழுதும் அழுது கொண்டிருந்ததை கண்ட பெற்றோர், அக்குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில், மருத்துவர்கள் மேற்கொண்ட X-ray பரிசோதனையில், அப்பெண் குழந்தையின் தொடை பகுதி முறிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலிஸில் புகார் அளித்திருந்தனர்.

அதன் பின்னர், Bandar Dato' Onn-இல், கைது செய்யப்பட்ட அந்த குழந்தை பராமரிப்பாளரை போலிஸ் விசாரணைக்காக 6 நாள்களுக்கு போலிஸ் தடுத்து வைத்திருந்தது.

Related News