ஹனோய், ஜனவரி.17-
ஆசியான் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு கட்டமைப்பின் செயலகம் கோலாலம்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் என்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி 12 முதல் 16 வரை வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற 6-வது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து கோபிந்த் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தச் செயலகம் கோலாலம்பூரில் அமைவது, பிராந்தியத்தின் டிஜிட்டல் முன்னுரிமைகளை ஆதரிப்பதிலும், நம்பகமான டிஜிட்டல் நிர்வாகத்தை உருவாக்குவதிலும் மலேசியாவிற்கு இருக்கும் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்.
ஆசியான் AI பாதுகாப்பு கட்டமைப்பு என்பது திறன் மேம்பாடு, ஒழுங்குமுறை தயார்நிலை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு பிராந்தியத்ன் தளமாகச் செயல்படும்.
AI தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிச் செய்யும் அதே வேளையில், அதன் அபாயங்கள் மற்றும் தவறான பயன்பாடுகளைத் திறம்படக் கையாள்வதே இதன் நோக்கமாகுமாகும் என்று அமைச்சர் கோபிந்த் விளக்கினார்.








