Oct 9, 2026
Thisaigal NewsYouTube

போர்ப்படை விமானங்கள் தாழ்வாகப் பறந்தால், பொது மக்கள் பீதி அடைய வேண்டாம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போர்ப்படை விமானங்கள் தாழ்வாகப் பறந்தால், பொது மக்கள் பீதி அடைய வேண்டாம்!

கோலாலம்பூர், ஜூன்.22-

இன்று முதல் ஜூன் 26 வரை கிள்ளான் பள்ளத்தாக்கு வான்வெளியில் மலேசிய விமானப்படை விமானங்களும் போர்ப் படை அதிவேக விமானங்களும், தாழ்வாகப் பறக்கும் என்பதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20வது விமானப்படைத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் அஸ்ஃகார் கான் கொரிமான் கானின் பணி ஓய்வு அணிவகுப்பை முன்னிட்டு இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. சுபாங் விமானப்படைத் தளத்தில் இந்தப் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், உலங்கூர்திகள் மூலம் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என டியுடிஎம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →