Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மனித உரிமை மீதான தேசியத் திட்டம் தொடங்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனித உரிமை மீதான தேசியத் திட்டம் தொடங்கப்படும்

டிச.10-

நாட்டின் வணிக நடைமுறைகளில் மனித உரிமக் கருத்தாய்வுகளை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில்அடுத்த ஆண்டு ஜனவரியில் வணிகம் மற்றும் மனித உரிமைகளுக்கான தேசிய செயல்திட்டம் தொடங்கப்படும் என்று சட்டம் மற்றும் துறை சார்ந்த சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ Azalina Othman Said தெரிவித்தார்.

வணிகம் மற்றும் மனித உரிமைகளுக்கான தேசிய செயல்திட்டம் உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்பினரிடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். அத்துடன் அனைத்துலக மனித உரிமைகள் தர நிலைகளுடன் வணிகத்துறைக்கு உதவுவதை நோக்கமாக் கொண்டு இருக்கும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.

இந்த தேசிய செயல்திட்டம், நிறுவனங்கள் சர்வதேச மனித உரிமைகள் தரைநிலைகளுக்கு இணங்கவும், மனித உரிமைகள் தொடர்பான பொருத்தமான நடவடிக்கைககளை செயல்படுத்துவதிலும் பல்வேறு நிலையிலான நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று டிசம்பர் 10 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைதினத்தையொட்டி வழங்கிய செய்தியில் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா இதனை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →