புத்ராஜெயா, நவம்பர்.27-
தென் தாய்லாந்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி Hat Yai நகரில் அவதியுற்று வந்த ஆகக்கடைசி நபர்களான 6 மலேசியர்களும் இன்று வியாழக்கிழமை வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பரிதவித்து வந்த அந்த ஆறு மலேசியர்களும், ஹோட்டலிலிருந்து வெளியேறி, Central Hat Yai- க்குச் செல்ல வெள்ளத்தின் மத்தியில் முழங்கால் வரை உயர்ந்திருந்த நீரின் மட்டத்தில் நடந்தே சென்றதாகப் பாதிக்கப்பட்ட மலேசியர்களில் ஒருவரான 38 வயது நூருல் சஃபினார் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.
அந்த மாது, தனது கணவர் மற்றும் 9, 5 வயதில் உள்ள இரு பிள்ளைகளுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார். கனத்த மழை, இன்னும் நில நாட்கள் வரை நீடிக்கும் என்று ஆருடம் கூறப்பட்டதால் தாங்கள் ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








