உள்ளூர் பெண்ணை மணந்து கொண்ட வங்காளதேச ஆடவரை மூளையாக கொண்டு செயல்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இணைய சூதாட்டக் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு தினங்களுக்குப் பல்வேறு இடங்களில் மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதன் புதிய இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில் ஒரு சுணூக்கர் செண்டரில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய குறியீட்டு எண்ணைக் கொண்டு திறக்கப்படும் பாதாள அறை கண்டு பிடிக்கப்பட்டது. ஓர் வங்காளதேச ஆடவரும், மூன்று இந்தோனேசியர்களும், 40 வயது உள்ளூர் ஆடவரும், இரண்டு இந்தோனேசிய பெண்களும் கைது
கைது செய்யப்பட்ட வேளையில், அந்த ரகசிய பாதாள அறையிலிருந்து இணைய சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 46 மடிக்கணினிகள், 37 கடப்பிதழ்கள் உட்பட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 450 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக ருஸ்லின் ஜுசோ குறிப்பிட்டார். அதன் பின்னர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட சோதனையில் எஞ்சிய நபர்கள் பிடிபட்டதாக அவர் விளக்கினார்.

Related News

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்

ஒரு வருடமே வேலை… விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நலன்கள்


