பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.15-
பண்டார் உத்தாமா பள்ளியில், 14 வயது மாணவர் ஒருவர் சக மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவத்தில், அம்மாணவனின் தந்தை மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.
தனது மகன் இத்தகைய வன்முறையைச் செய்வான் என்று தான் ஒரு போதும் நினைக்கவில்லை என்று ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அமைதியான மற்றும் அடக்கமான தனது மகன் பற்றி, தற்போது என்ன சொன்னாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மரணமடைந்த மாணவியின் குடும்பத்தை எப்படி எதிர்கொள்வதென்றே தனக்குத் தெரியவில்லை என்றும், என்ன செய்தாலும் அவர்களது மகளை மீண்டும் கொண்டு வர முடியாது என்றும் அவர் தனது மன வேதனையைப் பகிர்ந்துள்ளார்.








