Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கடவுள் வாழ்த்துக்கும், தமிழ் வாழ்த்துக்கும் தடை ! ஆனால் பாசாஹன் டோவா வுக்கு அனுமதி ?
தற்போதைய செய்திகள்

கடவுள் வாழ்த்துக்கும், தமிழ் வாழ்த்துக்கும் தடை ! ஆனால் பாசாஹன் டோவா வுக்கு அனுமதி ?

Share:

பினாங்கு Kepala Batas இல் நடைபெற்ற தேசிய அளவிலான ஆரம்பப் பள்ளி, இடைநிலைப்பள்ளிக்கான செந்தமிழ் விழா 2023 நிகழ்வில் கடவுள் வாழ்த்துக்கும் தமிழ் வாழ்த்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் அவ்விழாவில் " BACAAN DOA " வாசிக்கப்பட்டது தமிழ்ப்பள்ளிக்களுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளன .

ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட, மாநில, தேசிய நிலையிலான தமிழ் மொழி சார்ந்த இந்த போட்டி நிகழ்ச்சியை கல்வி அமைச்சு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. தமிழ் இலக்கியங்களையும் தமிழ் மொழியின் மாண்பையும் முன்னிறுத்தும் தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு தமிழ் மொழி நிகழ்ச்சியில் தடை விதித்திருப்பது மொழி ஆர்வலர்கள் பலரின் அதிருப்தியைத் தூண்டியுள்ளது.

மேலும், அவ்விழாவின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் பாடுவத்தற்குத் தடை விதித்த ஏற்பாட்டுக் குழுவினர் தமிழுக்காகப் படைக்கப்பட்ட நிகழ்ச்சியில் " BACAAN DOA " வாசிக்க வைத்திருப்பது சரியான ஒன்றா ? என்று கேள்வியும் எழுந்துள்ளது .

அத்துடன் ஆண்டாண்டு காலமாய் இந்த விழாவில் வழக்கமாக இடம்பெற்று வரும் திருவள்ளுவர் உருவப் படமும் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் வார்த்தைகளும் அகற்றப்பட்டுள்ளன , ஆனால் மீண்டும் அந்தப் பதாகையில் " செந்தமிழ் விழா " என்று சொல்லைத் தனியாக ஒட்டப்பட்டிருப்பதும் தெரிக்கின்றது .

கெடா மாநிலத்தில்கூட அவ்விரு பாடல்களுக்கும் தடை விதிக்கப்படாத நிலையில், பினாங்கில் நடத்தப்பட்ட தேசிய நிலையிலான செந்தமிழ் விழாவில் தடை விதித்திருப்பது அதிர்ச்சியாக இருப்பதாக பலர் கருத்துரைக்கின்றனர்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் யார் ? அக்குழுவில் இந்தியர்கள் இல்லையா ? அல்லது நிகழ்வின் ஏற்பாட்டுக்கு குழுவிலுள்ள இந்தியர்களின் கருத்துக்கு செவி சாய்க்கவில்லையா என்பதுத்தான் இங்கு பலரின் கேள்வியாக உள்ளது . செந்தமிழ் விழா என்பது முழுமையாக தமிழர்கள் சார்ந்த நிகழ்வாகும் ஆனால் அந்நிகழ்வில் தமிழர்களுக்கே முக்கியத்துவம் இல்லையா என்ற கேள்விக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் பதிலளிக்க வேண்டும் . செந்தமிழ் விழாவில் நடைபெற்ற இச்சம்பவத்திற்கு முழுமையான விசாரணை அறிக்கைவுடன் கல்வி அமைச்சு பதிலளிக்க முன் வர வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்