குவாந்தான், ஜூலை.21-
பகாங் மாநிலத்தின் உயரிய விருதான டத்தோ பட்டத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 6 ஆயிரம் ரிங்கிட்டைப் பெற்று, நபரை ஏமாற்றியதாக நம்பப்படும் ஆடவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சபா மாநில அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டத்தே அந்தஸ்தைக் கொண்ட 40 வயது மதிக்கத்தக்க அந்த வர்த்தகர், இன்று மதியம் கோத்தா கினபாலுவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சரவாக் மாநிலத்தை சேர்ந்த அந்த நபர், டத்தோ விருதை விற்பனை செய்வதற்கோ அல்லது பரிந்துரைப்பதற்கோ எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், டத்தோ விருதை வாங்கிக் கொடுக்க முடியும் என்று கூறி, 6 ஆயிரம் ரிங்கிட்டை நபர் ஒருவரிடமிருந்து பெற்றுள்ளதாக எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.








