Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கள்ளத்தனமாக செம்பனை எண்ணெய் கடத்தல்: இருவர் கைது, 212,200 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கள்ளத்தனமாக செம்பனை எண்ணெய் கடத்தல்: இருவர் கைது, 212,200 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

கோலாலம்பூர், ஜூலை.13-

கள்ளத்தனமாக கச்சா செம்பனை எண்ணெய் கடத்திய இருவரை புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு - அமலாக்கப் பிரிவின் நடவடிக்கை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஓப் சாவிட் என்ற நடவடிக்கையின் மூலம், கிள்ளானில் சந்தேகத்திற்குரிய ஒரு லாரியைப் பின் தொடர்ந்த்ய், பூச்சோங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் சுமார் 4,000 லிட்டர் செம்பனை எண்ணெய் கொண்ட நான்கு கொள்கலன்கள், 500 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட எண்ணெய், 13 ஆயிரத்து 500 லிட்டர் கச்சா செம்பனை எண்ணெய் கொண்ட ஐந்து தொட்டிகள் உட்பட 2 இலட்சத்து 12 ஆயிரத்து 200 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜேஎஸ்பிடி புக்கிட் அமான் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

முறையான உரிமம் இல்லாமல் செம்பனை எண்ணெய் வைத்திருந்ததற்காக 36 வயது லாரி ஓட்டுநரும் 44 வயது தொழிற்சாலைப் பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →