சிரம்பான், செப்டம்பர்.25-
சட்ட ரீதியான காரணமின்றி துப்பாக்கி வேட்டைக் கிளப்பிய போலீஸ் அதிகாரி ஒருவர், சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
37 வயது இஸாட் ஃபிட்ரி ஹாஷிம் என்ற அந்த போலீஸ் அதிகாரி, மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரொஸ்லி முன்னிலையில் நிறுத்தப்பட்டு , குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பண்டார் பிரிமா செனாவாங், ஜாலான் பிபிஎஸ் 2, இல் உள்ள ஒரு ஸ்டால் கடையின் முன், அந்த போலீஸ் அதிகாரி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து அந்த போலீஸ் அதிகாரி விசாரணை கோரியிருப்பதால் அவரை 2,500 ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.








