Jan 13, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாம் ADTEC – JTM கல்லூரிக்கு மனித வள அமைச்சர் வருகை
தற்போதைய செய்திகள்

ஷா ஆலாம் ADTEC – JTM கல்லூரிக்கு மனித வள அமைச்சர் வருகை

Share:

ஷா ஆலாம், ஜனவரி.13-

ஷா ஆலாமில் உள்ள ADTEC – JTM எனப்படும் ஆள்பல இலாகாவின் மேல்நிலைத் தொழில்நுட்பப் பயிற்சி கல்லூரிக்கு மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், இன்று அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டார்.

நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கில், மனித வள அமைச்சின் ஆள் பல இலாகாவின் கீழ் இயங்கும் ADTEC – JTM கல்லூரியின் செயல்பாடுகளையும் அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்நிலைத் தொழில்நுட்பப் பயிற்சிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

மலேசியாவை ஓர் உயர் வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு, இளைஞர்கள் பாரம்பரியக் கல்வியுடன் TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ADTEC – JTM கல்லூரி மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி 33 மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வழங்குகிறது. பயிற்சி காலத்தில் அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுவதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

நாட்டின் தொழில் துறைகளுக்கு தேவையான திவேட் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதில் மனித வள அமைச்சு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருவதாகவும் டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

முன்னதாக, மனித வள துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கானுடன் ADTEC – JTM கல்லூரிக்கு வருகை புரிந்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணனுக்கு கல்லூரி பொறுப்பாளர்களும் மாணவர்களும் உற்சாக வரவேற்பை நல்கினர்.

ADTEC – JTM கல்லூரியின் நடவடிக்கைகள் குறித்து அதன் இயக்குநர் ஹாஜா ஸுரைனி பிந்தி மூடா அமைச்சருக்கு விளக்கம் அளித்தார்.

Related News