May 4, 2026
Thisaigal NewsYouTube
தன்னையும் தாயையும் எழுப்பாததால் சகோதரிக்கு அரிவாள் மிரட்டல்: ஆடவருக்கு 2,500 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

தன்னையும் தாயையும் எழுப்பாததால் சகோதரிக்கு அரிவாள் மிரட்டல்: ஆடவருக்கு 2,500 ரிங்கிட் அபராதம்

Share:

தன்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பவில்லை என்ற ஆத்திரத்தில், தனது சகோதரியை அரிவாளைக் காட்டி மிரட்டிய 32 வயது ஆடவருக்கு பத்து பகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

ஜைனுல் அரிஃபின் ஜையிட் என்ற அந்த இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி அருண் நோவல் தாஸ் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த மார்ச் 1-ஆம் தேதி மதியம் 1.40 மணியளவில், கம்போங் ஸ்ரீ மெர்லோங்வில் ,உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நோய்க்காகத் தனது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்த நிலையில், தன்னை எழுப்பவில்லை என்று கூறி அவர் தனது 44 வயது சகோதரியை அரிவாளால் மிரட்டியுள்ளார்.

சம்பவத்தின் போது, தான் பலமுறை எழுப்பியும் சகோதரன் எழவில்லை என்று பாதிக்கப்பட்ட சகோதரி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனது சகோதரன் "என் பொறுமையை சோதிக்காதே... . மீறினால் நான் எதையும் செய்வேன்" என்று அரிவாளைக் காட்டி மிரட்டியதாக விசாரணையில் தெரியவிக்கப்பட்டது.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்