Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுப்பீர்: பாப்பாராய்டு வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுப்பீர்: பாப்பாராய்டு வலியுறுத்து

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.03-

நம்பிக்கை, அமைதி, நல்லிணக்கம் மற்றும் மனித குலத்தின் உயர்ந்த மாண்புகளை நிலை நிறுத்தும் இந்து மத விழாக்களில் எந்த வகையிலும் வன்முறைத்தன்மையிலான செயல்பாடுகள் கூடாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு வலியுறுத்தியுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கோவில் ஒன்றின் திருவிழாவின் போது வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக் கிளப்பிய சம்பவத்தைத் தாம் கடுமையாகக் கருதுவதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

வன்முறையைத் தூண்டக்கூடிய இத்தகையச் செயல்கள் கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற சம்பவம் சிலாங்கூர் மட்டுமின்றி நாட்டில் எந்தப் பகுதியிலும் இனி நிகழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்பட்டு, நீதியின் முன் நிறுத்த போலீஸ் துறையின் நடவடிக்கையைத் தாம் முழுமையாக ஆதரிப்பதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

ஆலயத் திருவிழாவின் போது துப்பாக்கி வேட்டைக் கிளப்பும் செயல், இந்து மத போதனையில் இல்லை. இத்தகையச் செயல்கள் நடப்பதை ஆலய நிர்வாகங்கள் ஒரு போதும் சகித்துக் கொள்ளக்கூடாது என்று மலேசிய இந்து சங்கம் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பாப்பாராய்டு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News