Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கொலை செய்யப்பட்டவர் காப்புறுதி ஏஜெண்டாகும்
தற்போதைய செய்திகள்

கொலை செய்யப்பட்டவர் காப்புறுதி ஏஜெண்டாகும்

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.10-

பினாங்கு, ஜாலான் பெர்மாத்தாங் பாவோ, அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி வீட்டின் பின்புறத்தில் கழுத்து வெட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் சூட்கேஸ் பெட்டியில் நேற்று மீட்கப்பட்ட ஆடவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் 31 வயது லீ பூன் ஹான் என்றும், அவர் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகவர் என்றும் அடையாளம் கூறப்பட்டுள்ளது. காப்புறுதி தொழில் துறை தொடர்பாக பெர்லிஸிற்குச் செல்வதாகக் கூறி, கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரின் கைப்பேசியும் செயலிழந்து விட்டதாக அவரின் 69 வயது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் செபராங் ஜெயா மருத்துவமனையின் சவக் கிடங்கிக் மகனின் உடலை அடையாளம் காண வந்த ஒரு வர்த்தரான அந்த முதியவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

Related News