ஜோகூர் பாரு, நவம்பர்.25-
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 29 அந்நிய நாட்டுப் பிரஜைகளை ஜோகூர் குடிநுழைவுத்துறையினர் கைது செய்தனர்.
நேற்று ஜோகூர் பாரு மாநகரில் வர்த்தக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இவர்கள் பிடிபட்டனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலின் அடிப்படையில் காலை 11 மணி முதல் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.
வாடிக்கையாளர் ஒருவருக்கு 260 ரிங்கிட் சேவைக் கட்டணமாக விதித்து பாலியல் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
22 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய 29 பேரும் 1963 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








