Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பொதுப் பல்கலைக்கழகக் கட்டணம் ஆயிரத்து 500 வெள்ளி கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பொதுப் பல்கலைக்கழகக் கட்டணம் ஆயிரத்து 500 வெள்ளி கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்

Share:

எதிர்வரும் ஜனவரி 2024 முதல் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுப் பதிவுக் கட்டணத்தை ஆயிரத்து 500 வெள்ளிக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனும் அரசாங்கத்தின் முடிவை அனைத்துப் பொதுப் பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

இதனை மீறும் பல்கலைக்கழகம் மீது உயர்க்கல்வி அமைச்சு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பொதுப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான பதிவுக் கட்டணம் ஆயிரத்து 500 வெள்ளிக்கு மிகாமல் இருக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

பல்கலைக்கழகங்களில் நுழையும் மாணவர்களில் பிடிபிடிஎன் கடனுதவியைப் பெறத் தகுதி பெறுவோருக்கு முன்பணமாக ஆயிரத்து 500 வெள்ளி வழங்கப்படும் முடிவுக்கு ஈடாக இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News