கோலாலம்பூர், அக்டோபர்.30-
இளையோர்களுக்காக மீண்டும் தொடங்கப்பட்டுள்ள பிஎல்கேஎன் எனப்படும் தேசிய சேவைப் பயிற்சி திட்டத்தின் 3.0 பயிற்சியில், சமூகவில் நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரக் கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தற்காப்புத்துறை துணை அமைச்சர் அட்லி ஸஹாரி தெரிவித்தார்.
இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்று மற்றும் கட்டொழுங்கை விதைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட பிஎல்கேஎன் பயிற்சித் திட்டத்தில் தற்போது அமலில் உள்ள 3.0 பயிற்சியில் பங்கேற்பாளர்கள் மத்தியில் சமூகவியல் கலாச்சாரக் கூறுகள் பற்றி அறிந்து கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்ப்பது புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது என்று அட்லி ஸஹாரி விளக்கினார்.








