May 21, 2026
Thisaigal NewsYouTube
இ மடானி  100 வெள்ளி மக்களின் சுமையை குறைக்கிறது
தற்போதைய செய்திகள்

இ மடானி 100 வெள்ளி மக்களின் சுமையை குறைக்கிறது

Share:

டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும் இ மடானி 100 வெள்ளிக்கான பண பட்டு வாடா பொதுமக்களின் பண சிக்கலை தீர்ப்பதற்கு பெரும் உதவியாக இருப்பதாக பெறுபவர்கள் கூறியிருக்கின்றனர்.

அப்பண பட்டு வாடாவை பயன்படுத்தி நல்ல உணவுகளை வாங்கி சாப்பிட முடிவதாலும் மாத நடுவில் எழும் பண சிக்கலை தவிர்ப்பதற்கு இத்தொகை பெரும் உதவியாக இருப்பதாக அறியப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வரை இந்த தொகையை பயன்படுத்த முடியும். MAE Maybank, Shopee, Touch N' Go, Petronas Setel ஆகிய செயல்களில் இந்த இ மடானி ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படவுள்ளதால் இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் விண்ணப்பித்து அத்தொகையை பெற்றுக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

Related News