இந்நாட்டில் இந்திய சமூகத்தினரை அடிப்படையாக கொண்டு புதிய அரசியல் கட்சி ஒன்றை தோற்றுவிப்பதற்கு ஓம்ஸ் அறிவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் கொண்டுள்ள திட்டம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது.
நேற்று கிள்ளான் லெட்சுமணா மண்டபத்தில் நடைபெற்ற ' புதிய எழுச்சியை நோக்கி இந்தியர்கள்" எனும் மாபெரும் கூட்டத்தில் புதிய அரசியல் கட்சியை தோற்றுவிப்பதற்கான தமது விருப்பத்தை ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஓம்ஸ் தியாகராஜனின் இத்திட்டத்தில் சமூகத் தலைவர்கள் பரவலாக தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு நிவாரணம் தேடும் நடவடிக்கையாக அவர்களை பிரதிநிதிக்க்கூடிய புதிய அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் சமூகத் தலைவர்களும், அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் முன்வைத்துள்ள பரிந்துரையை அடிப்படையாக கொண்டு புதிய அரசியல் கட்சி ஒன்று தோற்றுவிக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்ற ஓம் தியாராஜன் குறிப்பிட்டார்
மலேசிய இந்தியர்களின் வரலாற்றுப்பூர்வமான தியாகங்களை அரசாங்கம் மதிக்கும் வண்ணம் அவர்களின் சமூக பொருளாதார இன்னல்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு புதிய அரசியல் கட்சி தோற்றுவிக்கப்படுவதற்கான அவசியம் குறித்து இந்திய சமூகத்தினர் முன்வைத்துள்ள யோசனை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஓம்ஸ் தியாகராஜன் குறிப்பிட்டார்.








