Oct 2, 2026
Thisaigal NewsYouTube

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை வெள்ளத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட 55 மலேசியர்களில் ஒருவர், 37 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டு இன்று காலை மலேசியா திரும்பினார்.

தனியாக நேபாளத்துக்குச் சென்ற அந்த மலேசியர், வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பு நக்தாலி என்ற இடத்தில் இருந்ததாக குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசியா சோலிடாரிடி: ஃபேமிலிஸ் இன் ஹோப் என்ற மாஸ்ஃபிஹ் (MASFIH) அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் நாக்தாலியில் சிக்கிய அவர், தகவல் தொடர்பு வசதிகளும் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்ததால் நீண்ட காலமாக வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளார்.

பின்னர் தனது முயற்சியில் காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தைச் சென்றடைந்த அவர், நேற்று அங்கு தோன்றியதாக விஸ்மா புத்ரா குடும்பத்தினருக்குத் தெரிவித்தது.

அவர் இன்று காலை மலேசியா திரும்பி, குடும்பத்தினருடன் இணைந்து விட்டதாக மாஸ்ஃபிஹ் தெரிவித்துள்ளது.

ஒருவர் 37 நாட்களுக்குப் பிறகும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது, தொடர்பு இல்லாமல் இருக்கும் மற்ற 54 மலேசியர்களையும் மீண்டும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →