May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் தலைமையாசிரியர் பலி
தற்போதைய செய்திகள்

விபத்தில் தலைமையாசிரியர் பலி

Share:

கோலா கிராய், ஜூன் 04-

இன்று அதிகாலை 6.30 மணியளவில் கிளந்தான், ஜாலான் கோத்தா பாரு- குவா முசாங் சாலையின் 71 ஆவது கிலோமீட்டரில் கோலா கிராய்-யில் நிகழ்ந்த சாலை விபத்தில் தலைமையாசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

52 வயது அஹ்மத் அனுவார் கஸாலி என்று அடையாளம் கூறப்பட்ட ஜெராம் டெகோ தேசிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் பயணித்த பெரோடுவா கெலிசா கார், எதிரே வந்த 26 வயது மருத்துவரின் பெரோடுவா மைவி காரில் மோதியதில் கடும் காயங்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.

சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மருத்துவர் சுயநினைவு திரும்பாமலேயே மாண்டதாக கோலா கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லாம் மாமத் தெரிவித்தார்.

Related News