சிரம்பான், செப்டம்பர்.25-
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவை விட கூடுதல் நாட்களுக்குத் தங்கியது மற்றும் மலேசியப் பெண்ணின் ஏடிஎம் கார்ட்டை வைத்திருந்ததாக நைஜீரியா ஆடவர் ஒருவர் சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
38 வயது உடோ இமே என்ற அந்த நைஜீரியா ஆடவர், மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரொஸ்லி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் நீலாய், டேசா பல்மா அடுக்குமாடி வீட்டில் அந்த ஆடவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








