ஜன.12
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு , புத்ராஜெயா, Presint 5 இல் உள்ள ஒரு வீட்டில் 23 மாத கைக்குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக அக்குழந்தையின் தாயார் மற்றும் அவருடன் ஒரே வீட்டி தங்கியிருந்த ஒரு பெண் ஆகியோருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
அந்த கைக்குழந்தையின் தாயாரான 40 வயது நோர் ஐஷா முஹமாட் யுனுஸ் மற்றும் அவரின் தோழியான 37 வயதுடைய நோர் ஐஷா இப்ராஹிம் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள கொலைச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து அவ்விருவரும் குற்றவாளிகளே என்று நீதிபதி டத்தோ முஹமாட் ஜாமில் ஹுசெயின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களான அவ்விருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மத்திய பகுதியில் புத்ராஜெயாவில் Presint 5 இல் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








