Mar 25, 2026
Thisaigal NewsYouTube
சாலையில் சாகசம் புரிந்த இருவர் பலி
தற்போதைய செய்திகள்

சாலையில் சாகசம் புரிந்த இருவர் பலி

Share:

கிள்ளான், ஆகஸ்ட் 05-

கிள்ளானில் இன்று அதிகாலையில் சாலையில் அதிபயங்கரமாக மோட்டார் சைக்கிள் சாகசம் புரிந்த இளைஞர் கும்பலில் இருவர், கடும் காயங்களுக்கு ஆளாகி மாண்டனர்.

பெர்சியரான் ராஜா மூட -வில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர் என்று தென் கிள்ளாள் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

இந்த விபத்தில் Yamaha 125ZR, Yamaha Lagenda 115Z, Yamaha Y16ZR மற்றும் Honda RS-X FS150 ஆகிய நான்கு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பாண்டமாறன், கொம்ப்ளெக்ஸ் சுகன் பாண்டமாறன்- னிலிருந்து கோலக்கிள்ளான் வரை, கோலாவின் (KOLA-வின்) முதன்மை சாலையை பந்தயக் களமாக மாற்றி, மோட்டார் சைக்கிள்களில் படுவேகமாக பல சுற்றுக்களை சுற்றி வந்த போது இந்த பயங்கர மோதல் நிகழ்ந்தது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மற்றொருவர், கிள்ளான், தேங்கு அம்புவான் ரஹிமாமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாண்டதாக ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது