நிலவி வரும் வெப்ப உஷ்ணநிலை பருவத்தின் காரணமாக, பள்ளியின் முதல் பருவ விடுமுறையில் இருந்து வரும் மாணவர்களின் விடுமுறை காலம் நீடிக்கப்படலாம் என நேற்று துணைப் பிரதமர் டத்தோ டாக்டர் அமாட் சாயிட் கூறிய கூற்றுக்கு மலேசிய தேசிய பல்கலைக்கழக்கத்தின் விரிவுரையாளர் டாக்டர் அனுவார் அமாட் கருத்து தெரிவித்துள்ளார். நிலவி வரும் வெப்ப உஷ்ணநிலையைக் கருத்தில் கொண்டு துணைப் பிரதமர் மாணவர்களின் விடுமுறையை நீடிக்கச் செய்வதைக் காட்டிலும், பள்ளியில் நடைபெறுகின்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தள்ளி போடுவது மேலும் வரவேற்கக்கூடியது என அவர் கருத்து வெளியிட்டார்.
அதனுடம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணாவர்களுக்க அவப்போது தண்ணீர் பருக நினைவூட்டி வந்தால் போதுமான என அவர் மேலும் தெரிவித்தார். எனவே, பள்ளி விடுமுறை காலத்தை நீடிப்பது இந்த வெப்ப உஷ்ணநிலை பருவத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி இல்லை என டாக்டர் அனுவார் அமாட் தெளிவுப்படுத்தினார்.








