Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் தந்தை மரணம் தொடர்பாக கைது செய்யப்படட மகனுக்கு மனநல பாதிப்பு - போலீஸ் உறுதி
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் தந்தை மரணம் தொடர்பாக கைது செய்யப்படட மகனுக்கு மனநல பாதிப்பு - போலீஸ் உறுதி

Share:

கிளந்தான் மாநிலத்தில் உள்ள கோத்தா பாரு, கம்பங் மஸ்ஜித் பாவுங் பயாம் பகுதியில் தந்தையை மகன் தாக்கிய சம்பவத்தில், சந்தேக நபர் சிசோபெர்னியா என்ற மன நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் 41 வயதுடைய மகன் சிறுநீர் கழித்து கொண்டிருந்த போது, 83 வயதுடைய தந்தை, அவரை கண்டித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகன் திடீரென தந்தையை தாக்கியுள்ளார்.

இந்நிலையில், கீழே விழுந்த தந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக முகமட் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

Related News