கோலாலம்பூர், அக்டோபர்.09-
இன்ஃபுளுவென்ஸா சளிக் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் மத்தியில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும்படி பெற்றோர் நலன் சார்ந்த அமைப்பு, இன்று கல்வி அமைச்சுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களிடையே அதிகரித்து வரும் சனிக் காய்ச்சல் தொற்றைக் கட்டுப்படுத்தவும், தடுப்பதற்கும் பள்ளிகளில் SOP நடைமுறைகளில் ஒன்றான, மாணவர்கள் முகக் கவசம் அணிவதை மீண்டும் அமல்படுத்துமாறு கல்வி நடவடிக்கைக்கான பெற்றோர் நலன் சார்ந்த அமைப்பின் தலைவர் நோர் அஸிமா ரஹிம் கேட்டுக் கொண்டார்.
சளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது துரிதமாக அதிகரித்து வருகின்ற காரணத்தினால் மாணவர்கள் முகக் கவசம் அணிவதைக் கல்வி அமைச்சு உடனடியாகக் கட்டாயமாக்க வேண்டும் என்று நோர் அஸிமா வலியுறுத்தினார்.








