வருகின்ற பினாங்கு சட்டமன்ற தேர்தலில், பாடாங் கோத்தா தொகுதியை மீண்டும் தற்காத்துக் கொள்வதற்கு நோக்கம் கொண்டிருக்கும், பினாங்கு முதல்வர் சௌ கொன் யோவ், மீண்டும் ஒருமுறை முதலமைச்சராக இருக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.
நடைபெறவிருக்கும் 15 ஆவது சட்டமன்ற தேர்தல், தாம் சந்திக்கும் கடைசி களமாக இருக்கும் என்று குறிப்பிட்ட சௌ கொன் யோவ், பாடாங் கோத்தா தொகுதியில் மீண்டும் ஒருமுறை போட்டியிடும் தமது விருப்பத்தை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 70 வயதை எட்ட விருக்கும் தாம், தேர்தலில் போட்டியிடுவது இதுவே கடைசி முறையாகும் என்றார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


