Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவின் சுகாதாரக் கொள்கையை மருத்துவர்கள் வழிநடத்த வேண்டும் - எம்எம்ஏ புதிய தலைவர் திருநாவுக்கரசு கருத்து!
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் சுகாதாரக் கொள்கையை மருத்துவர்கள் வழிநடத்த வேண்டும் - எம்எம்ஏ புதிய தலைவர் திருநாவுக்கரசு கருத்து!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

தேசிய சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும், நாட்டின் சுகாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதிலும் மருத்துவர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கத்தின் புதிய தலைவரான டத்தோ டாக்டர் ஆர். திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, கிராமப்புறம் முதல் மூன்றாம் நிலை மருத்துவமனைகள் வரை, அதில் பணியாற்றும் காதாரப் பணியாளர்களின் பணிகளை மேம்படுத்துவது, என 3 முக்கிய உறுதிமொழிகளைத் தாம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், அதிகப்படியான பணிச்சுமை மற்றும் விரோதமான பணிச்சூழல் உள்ளிட்ட கடுமையானச் சவால்களை மருத்துவப் பணியாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்வதாகவும் டாக்டர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

டத்தோ டாக்டர் கால்விண்டர் சிங் கைராவுக்குப் பிறகு, மலேசிய மருத்துவச் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோ டாக்டர் ஆர். திருநாவுக்கரசு அடுத்த ஓராண்டிற்கு அவ்வமைப்பின் தலைவராகப் பணியாற்றவுள்ளார்.

Related News