கோல திரங்கானு, செப்டம்பர்.28-
கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் திரெங்கானு சுங்கத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் மூன்று கொள்கலன்களில் இருந்த சுமார் 76 ஆயிரத்து 836 கிலோகிராம் உறைந்த உணவுப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பொருட்களின் மதிப்பு 2.45 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் திரங்கானு மாநில இயக்குநர் ஹஸ்பொல்லா டின் தெரிவித்தார்.
இறக்குமதி அனுமதி ஆவணம் இன்றி, இந்த உறைந்த கோழி, வாத்து இறைச்சியை 'கலப்பு காய்கறிகள்' என்று தவறாகப் பதிவு செய்ததன் மூலம் கடத்தல்காரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுங்கச் சட்டம் 1967-இன் கீழ் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.








