வட்டார மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தீயணைப்புக் குழாயை பயன்படுத்தியதற்காக, கிளந்தான், ரந்தாவ் பஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சித்தி ஸைலா முகமட் யூசோப்புக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் துறை அமைச்சு விரிவான விசாரணைய மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் ங கோர் மிங் தெரிவித்தார்.
தீயை அணைப்பதற்கு மட்டுமே தீயணைப்புக் குழாய்கள் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, பொதுமக்களின் அன்றாட தேவைக்கு அல்ல என்பதால், அதனை பயன்படுத்திய அந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று ஈப்போவில் நடைபெற்ற ஓட்டப்பந்தய நிகழ்வினை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடன் ங கோர் மிங் இதனை தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


